12 June 2010

தெய்வ மணிமாலை-1

திருவருட்பா
மூலமும் உரையும்

முதல் திருமுறை
தெய்வ மணி மாலை

திருவோங்கு புண்ணியச் செயலோங்கி யன்பருள்
திறலோங்கு செல்வ மோங்கச்
செறிவோங்க வறிவோங்கி நிறைவான வின்பந்
திகழ்ந் தோங்க அருள் கொடுத்து

மருவோங்கு செங்கமல மலரோங்கு வணமோங்க
வளர்கருணை மயமோங்கி யோர்
வரமோங்கு தெள்ளமுத வயமோங்கி யானந்த
வடிவாகி யோங்கி ஞான

உருவோங்கு முணர்வினிறை யோளியோங்கி யோங்குமையில்
ஊர்ந்தோங்கி எவ்வுயிர்க்கும்
உறவோங்கு நின்பதமேன் னுளமோங்கி வளமோங்க
உய்கின்ற நாளேந்த நாள்

தருவோங்கு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

உரை:
மரங்கள் நிறைந்த சென்னையிலுள்ள கந்தகோட்டத்துள் கோயில் கொண்டு உயர்கின்ற கந்த வேளே, குளிர்ந்த தோற்றத்தை உடைய தூய மாணிக்க மணிகளுள் அருள் நிறைந்த சைவ மணியாய்த் திகழும் ஆறு முகங்களையுடைய தெயய்வமாகிய மணியே , யாவரும் விரும்புதலையுடைய நல்வினைகளைச் செய்தளையுடைராதலால் அன்பும் அருளும் திறலும் மிக்க செல்வம் சிறக்கவும் அடக்கம் அமையவும் அறிவு மேன்மையுற நிறைந்த இன்பம் மிக்கு விளங்கவும் திருவருளை வழங்கி , மணமுடைய செந்தாமரை மலரின் நிறமுற்று மிகுகின்ற கருணையுருவாய் ஒப்புற உயர்ந்த தெள்ளிய அமுதப் பெருக்காய் ஆனந்த வடிவுற்றுச் சிறந்து ஞானப் பொருள் கொண்ட உணர்வின்கண் நிறை ஒளி மிக்குத் திகழும் மயில்மேல் இவர்ந்துயிர்ந்து எவ்வுயிர்க் கண்ணும் போருந்தும் நின்னுடைய திருவடி என் உள்ளத்தில் தங்குதலால் பெறலாகும் அருட்செல்வம் பெற்று உய்தி பெருங்காலம் எப்போது?

2 comments: