தெய்வ மணிமாலை - 10
கரையில்வீண் கதையெலா முதிர்கருங் காக்கைபோல்
கதறுவார் கள்ளுண்ட தீக்
கந்தம் நாறிட வூத்தை காதம் நாறிட வுறு
கடும் பொய்யிரு காதம் நாற
வரையில்வாய் கொடுதர்க்க வாதமிடுவார் சிவ
மணங்கமழ் மலர்ப்பொன் வாய்க்கு மவுன மிடுவாரிவரை முடரென வோதுறு
வழக்குநல் வழக்கெனினும் நான்
உரையிலவர் தமையுறா துனதுபுகழ் பேசுமவ
ரோடுறவு பெற வருளுவாய்
உயர்தெய்வ யானையொடு குறவர்மட மானுமுள்
ளுவப்புறு குணக்குன்றமே
தரையிலுயர் சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
தலமொங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.
உரை:
தெய்வயானையையும், வள்ளிநாயகியையும் விரும்பும் குணக்குன்றே,
நிலவுலகில் உயர்ந்த சென்னைக் கந்த கோட்டத்தில் ஓங்கும் கந்த வேளே,
தெய்வமணியே, பயனற்ற கதைகளையெலாம் முதிய காக்கைப் போல உரைப்பாரிடமும்,
கள்ளுண்ட ஊத்தை வாய் நாற்றம் நெடுந்தூரம் பரவ பேசுவாரிடமும், பொய்ச்சொல்
இருகாத தூரம் பரவ பேசுபவரிடமும், வரையின்றி தர்க்கம் செய்வோரிடமும்,
சிவமணம் கமழும் சொற்களை வாயால் ஓதாமல் மவுனம் கொள்பவரிடமும் நான் உறவு
கொள்ளாமல் உன் புகழ் பேசும் நல்லோரிடம் உறவு பெற அருள் செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment