செழுஞ்சுடர் மாலை - 8
திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 89
வேட்டே னினது திருவருளை
வினையே னினியித் துயர்பொறுக்க
மாட்டேன் மணியே யன்னேயென்
மன்னே வாழ்க்கை மாட்டுமனம்
நாட்டேன் அயன்மால் எதிர்வரினும்
நயக்கே னெனக்கு நல்காயோ
சேட்டேன் அலரும் பொழில்தணிகைத்
தேவே ஞானச் செழுஞ்சுடரே.
உரை:
உயரத்திலிருந்து தேன் சொரியும் சோலைகள் நிறைந்த தணிகை மலைத் தெய்வமே, ஞானச் செழுஞ்சுடரே, மணியே , அன்னை போல்பவனே , என் அரசே, நினது திருவருளைப பெற விரும்பி இதுகாறும் காத்திருந்தேன்; இனி சிறிதும் துயர் போருக்க மாட்டேன்.துயர் மிக்க இவ்வாழ்வில் என் கருத்தை செலுத்த மாட்டேன். அதுகுறித்து பிரமன், திருமால் ஆகிய தேவர்கள் எதிர்வந்து சொன்னாலும் அதனை விரும்பேன்; ஆதலால் எனக்கு நின் திருவருளை நல்குவாயன்றோ?
No comments:
Post a Comment