01 September 2010

குறையிரந்த பத்து - 4

குறையிரந்த பத்து - 4




திருவருட்பா - முதல் திருமுறை - பாடல் எண் - 96



உண்டாய யுலகுயிர்கள் தம்மைக் காக்க

ஒளித்திருத்தவ் யுயிர்வினைகள் ஒருங்கே நாளும்

கண்டாயே விவ்வேழை கலங்கும் தன்மை

காணாயோ பன்னிரண்டு கண்கள் கொண்டோய்

தண்டாத நின்னருட்குத் தகுமோ விட்டால்

தருமமோ தணிவகைவரைத் தலத்தின் வாழ்வே

விண்டாதி தேவர்தொழும் முதலே முத்தி

வித்தேசொற் பதம்கடந்த வேற்கை யானே



உரை :

தணிகை மலையில் வாழும் பரம்பொருளே ,பன்னிரண்டு

கண்களையுடையவனே, தேவர்கள் தொழும் முதல்வனே,

முக்திப் பேற்றுக்கு காரணமாணவனே, வேற்படை ஏந்தும்

பெருமானே, உலகுகளையும் உயிர்களையும் காத்தற் பொருட்டு

அவை காண வகையில் அவ்வுயிர் உலகுகளில் மறைந்திருப்பவனே,

உயிர்கள் தாமும் வினை பல செய்தே வாழச் செய்பவனே , ஏழையாகிய

யான் மனம் கலங்கி நிற்கும் நிலையைக் காண மாட்டாயோ, அவ்வாறு

இருப்பது உன் திருவருள் நிலைக்குத் தகுவதன்றோ ?

என்னிலையை நீ காணாதிருப்பது உனக்கு தருமமாகாதோ ?

1 comment:

  1. அய்யா, இறைவனின் கருனையே வினைகளை ஊட்டி பிறவி தோறும் நம்மை நாமே உணரவைத்து, பிறவிக்கடலை நீந்த உதவுவதுதானே.யான் மனம் கலங்கி நிற்கும் நிலையைக் காண மாட்டாரா

    ReplyDelete