23 June 2010

தெய்வ மணிமாலை - 13

தெய்வ மணிமாலை - 13
வன்பெரு நெருப்பினைப் புன்புழுப் பற்றுமோ
வானை யொருமான் தாவுமோ
வலியுள்ள புலியை யோர் எலி சீறுமோ பெரிய
மலையை யோர் ஈச் சிறகினால்
துன்புற வசைக்குமோ வச்சிரத் தூணொரு
துரும்பினால் துண்டமாமோ
சூரியனை யிருள்வந்து சுழுமோ காற்றில்மழை
தோயுமோ இல்லையது போல்
அன்புடைய நின்னடியர் பொன்னடியை யுன்னுமவர்
அடிமலர் முடிக்கணிந் தோர்க்
கவலமுறுமோ காம வெகுளி யுறுமோ மனத்
தற்பமும் விகற்ப முறுமோ
தன்புகழ் செய் சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.

உரை:
கந்தப் பெருமானே, தெய்வ மணியே, பெரிய நெருப்பை புழு பற்ற
முடியுமா? வானகத்தை மான் தாவியடைய முடியுமா? புலியை எலி நேர் நின்று சீற
முடியுமா? பெரிய மலையை ஈ தன் சிறகால் அசைக்க முடியுமா? வச்சிரத்தாலான
தூணை சிறு துரும்பினால் துண்டாக்க முடியுமா? சூரியனை இருள் சூழ்ந்து
கொள்ள முடியுமா? மழைநீர் உறைவது போல் காற்றை உறையச் செய்ய முடியுமா?
ஒருகாலும் முடியாது. அதுபோல உன் திருவடியை சிந்தித்து பரபுவரை அவலமோ,
காமமோ, வெகுளியோ அடைய முடியுமா ?

No comments:

Post a Comment