25 June 2010

தெய்வ மணிமாலை - 15

தெய்வ மணிமாலை - 15

கற்றொளிகொள் உணர்வினோர் வேண்டாத விப்பெருங்
கன்ம வுடலிற் பருவம் நேர்
கண்டழியு மிளமைதான் பகல் வேடமோ புரைக்
கடனீர் கொலோ கபடமோ
உற்றொளியின் வெயிலிட்ட மஞ்சளோ வானிட்ட
ஒருவிலோ நீர்க் குமிழியோ
உலையனல் பெறக் காற்றுள் ஊதும் துருத்தியோ
ஒன்றுமறியே னிதனை நான்
பற்றுறுதியாக் கொண்டு வனிதையர்கண் வலையினில்
பட்டுமதி கெட்டுழன்றே
பாவமே பயில்கின்ற தல்லாது நின்னடிப்
பற்றணுவு முற்றறி கிலேன்
சற்றையகல் சென்னையிற் கந்த கோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.

உரை:
சென்னைக் கந்த கோட்டத்துள் விளங்கும் கந்த வேளே, தெய்வ மணியே,
ஞான உணர்வு கொண்ட சான்றோர் விரும்பாத உடம்பில் பல பருவங்களைக் கொண்டு
நீங்கும் இளமைப் பருவம், பகல் வேடமோ, கபடத் தோற்றமோ, வானவில்லோ,
நீர்க்குமிழியோ, ஒன்றையும் அறியேன். உன் திருவடிக்கண் பற்றுக்கொண்டு
ஒழுகுவது நல்வினையாகும். அதனை நான் செய்யாமல் மகளிர் கண்பார்வையாகிய
வலையில் அகப்பட்டு அறிவிழந்து பாவமே செய்கின்றேன். இனி யான் யாது
செய்வது?

No comments:

Post a Comment