பாய்ப்பட்ட புலியன்ன நாய்ப்பட்ட கயவர்தம்
பாழ்ப்பட்ட மனையில் நெடுநாள்
பண்பட்ட கழுநீரும் விண்பட்ட வின்னமுது
பட்ட பாடாகு மன்றிப்
போய்ப்பட்ட புல்லுமணி பூப்பட்ட பாடுநற்
பூண்பட்ட பாடு தவிடும்
புண்பட்ட வுமியுமுயர் பொன்பட்ட பாடவர்கள்
போக மொரு போக மாமோ
ஆய்ப்பட்ட மறைமுடிச் சேய்ப்பட்ட நின்னடிக்
காட்பட்ட பெரு வாழ்விலே
அருள்பட்ட நெறியுமெய்ப் பொருள்பட்ட நிலையுமுற
அமர்போகமே போகமாம்
தாய்ப்பட்ட சென்னையிற் கந்த கோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.
உரை:
கந்தப் பெருமானே, தெய்வ மணியே, புலி போலவும் நாய் போலவும்
கயவர்கள் தம் வீடுகளில் சோறு வடித்த நீருக்கு படும்பாடு தேவர்கள் அமுது
பெறப் பட்ட பாடு போலாகும்; வயல் புல்லுக்கும், தோட்டப் பூவுக்கும்
அவர்கள் படும் பாடு நல்ல அழகிய பூ ஆரத்திற்கு படும் பாடாகும்;
இவ்வாறு பெரும்பாடுபட்டு நுகரும் போகம் போகமாகாது.
அறிவால் ஆராயப்படும் வேதமுடிவுக்கும் அப்பாற்பட்ட உன் திருவடிக்கு
ஆட்படும் நெறியே நிலையான போகம்; உயர்வான போகமாகும்.
No comments:
Post a Comment