தெய்வ மணி மாலை -3
துடியென்னும் இடையனம் பிடியென்னும் நடைமுகில்துணையென்னும் பிணைய லளகஞ்
சூதென்னு முலைசெழுந் தாதென்று மலைபுனற்
சுழியென்ன மொழிசெ யுந்தி
வடியென்னும் விழிநிறையு மதியென்னும் வதனமென
மன்கையர்தமை அங்க முற்றே
மனமென்னும் ஒருபாவி மயிலென்னும் அதுமேவி
மாழ்கநான் வாழ்க விந்தப்
படியென்னு மாசையைக் கடியென்ன வென்சொலிப்
படியென்ன வரியாது நின்
படியென்ன வென்மொழிப் படியின்ன வித்தைநீ
படியென்னு மென் செய்குவேன்
துடிதுன்னு மதில் சென்னை கந்த கோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்ய மணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே
உரை :
மேகம் படியும் மதில் பொருந்திய சென்னைக் கந்த கோட்டத்தில் எழுந்தருளும் கந்த வேளே, தூய மணிகளுட் சைவமணியாம், ஷண்முகத தெய்வ மணியே, இடை துடியை நிகர்க்கும் எனவும், மாலை சூடிய கூந்தல் கருமுகிலை நிகர்க்கும் எனவும், முலை சூதாடும் வல்லெனும் காயை நிகர்க்கும் எனவும் , செழித்த தாது எனப்படும் அலையையுடைய நீரின்கண் தோன்றும் சுழியை போல்வது உந்தி எனவும், மாவடு நிகர்க்கும் கண் எனவும், முழு திங்கள் போலும் முகம் எனவும், புகழப்படும் மகளிரின் மேனியைப் பற்றி மனமாகிய ஒருபாவி , காம மயில் என்னும் அதனை எய்தி மயங்குதலால், நான் வாழ்வு பெற இவ்வுலகியல் ஆசையை நீக்க என்று சொல்லும் என்னுடைய சொல் இத்தகையது என்று சொல்லவும், அதனை அறிந்து கொள்ளாமல் நின் சொற்படி என்ன? யான் சொல்லும் மொழியின்படி இவ்வித்தையை நீ படித்து நடப்பாயாக என்று சொல்லுவதால் இதற்கு என்ன செய்வேன் ?
No comments:
Post a Comment