தெய்வ மணிமாலை - 6
காமவுட் பகைவனுற் கோபவெங் கொடியனும்
கனலோப முழு மூடனும்
கடுமோக வீணனும் கொடு மதமெனும் துட்ட
கண் கெட்ட ஆங்காரியும்
ஏமமறு மாச்சரிய விழலனும் கொலையென்
றியம்பு பாதகனுமாம் இவ்
வெழுவரும் இவர்க்குற்ற வுறவான பேர்களும்
எனைப்பற் றிடாம லருள்வாய்
சேமமிகு மாமறையி னோமெனும் மருட்பதத்
திறனருளி மலய முனிவன்
சிந்தனையின் வந்தனை யுவந்த மெய்ஞ்ஞானசிவ
தேசிக சிகாரத்னமே
தாமமொளிர் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.
உரை:
பெரு நகரமான சென்னைக் கந்த கோட்டத்துள் எழுந்தருளும் கந்தசாமிக் கடவுளே,
வேதங்களின் ஓம் என வழங்கும் அருள் மொழியின் கூறுகளை அகத்திய முனிவர்க்கு
அருளி, அவர் சிந்தனைக்கண் வைத்துச் செய்த வழிபாட்டுக்கு அருளிய பெருமானே,
காமம் எனும் உட்பகைவனும்,
கோபம் எனும் கொடியவனும், லோபம் எனும் முழு மூடனும், மோகம் எனும் வீணனும்,
கொடிய மதம் எனும் துட்டத்தனமும்,
ஆங்கார உருவினனும், மாச்சரியம் எனும் விழலனீம், கொலை எனப்படும்
பாதகனுமாகிய எழுவரும், இவர்களின் உறவினரான பிறரும் எனைக் கைப்பற்றிக்
கொள்ளாதவாறு அருள் செய்தல் வேண்டும்
No comments:
Post a Comment