19 June 2010

தெய்வ மணிமாலை - 7

தெய்வ மணிமாலை- 7
நிலையுறு நிராசையா முயர்குலப் பெண்டிரோடு
நிகழ் சாந்தமாம் புதல்வனும்
நெறிபெறு முதாரகுண மென்னுநற் பொருளுமருள்
நீக்கு மறிவாம் துணைவனும்
மலைவறு நிராங்கார நண்பனும் சுத்தமுறு
மனமெனும் நல்லே வலும்
வருசகல கேவல மிலாத விடமும் பெற்று
வாழ்கின்ற வாழ் வருள்வாய்
அலையிலாச் சிவஞான வாரியே யானந்த
அமுதமே குமுத மலர் வாய்
அணிகொள் பொற்கொடி பசுங்கொடி யிருபுறம் படர்ந்
தழகுபெற வருபொன் மலையே
தலைவர்புகழ் சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.

உரை:
கந்த கோட்டத்தில் எழுந்தருளும் கந்த வேளே, சண்முகத் தெய்வமணியே,
சிவஞானக்கடலே, அமுதமானவனே, வலப்புறத்தில் வள்ளியுடனும் இடப்புறத்தில்
தெய்வானையுடனும், அழகு திகழ வரும் பொன்மாலை போன்ற பெருமானே, நிலைத்த
ஆசையில்லாமையும், சாந்தமும், நன்னெறியும், மயக்கத்தைப் போக்கும்
நல்லறிவும், அடக்க இயல்பான நிராங்காரமும், தூய்மையுற்ற மனமும், சுத்த
நிலையமாகிய இடமும் கொண்டு வாழும் சிவபோக வாழ்வை அருள்வாயாக.

No comments:

Post a Comment